டிக் டாக் கணக்கு வைத்திருக்கும் நபருக்கு எதிராக ரோஸ்மா அவதூறு வழக்கு

கோலாலம்பூர், ஜன.28-

சாத்தான்கள் மற்றும் போமோக்களைக் கொண்டு தாம் மாந்ரீக சடங்குகளை நடத்தி வருவதாக டிக் டாக் கணக்கர் ஒருவர் பதிவேற்றம் செய்துள்ள காணொளி, தமது கெளரவத்தை சீர்குலைத்து விட்டதாக கூறி, அந்த நபருக்கு எதிராக ஒரு மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் அவதூறு வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
கூ முகமட் ஹில்மி கூ டின் என்ற அந்த நபர், தமக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையின் மதிப்பை அப்பிடெவிட் மனு ஒன்றின் மூலம் தாக்கல் செய்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பான மனு, கடந்த ஆண்டு பிரதிவாதியிடம் சார்வு செய்யப்பட்டும், இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்காததால், அவரிடமிருந்து மேற்கண்ட இழப்பீட்டுத் தொகையை கோருவதற்கு தமது கட்சிக்காரர், இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளார் என்று ரோஸ்மாவின் வழக்கறிஞர் பஹாருடின் அரிப் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வழக்கு மீதான விசாரணை வரும் மே 27 ஆ ம் தேதி நடைபெறும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி அகமட் ஷாரீர் சால்லே விசாரணை தேதியை அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS