கோலாலம்பூர், ஜன.28-
ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ பிரதிநிதிகளின் நிலை, வெறும் ஈக்கள்தான் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வர்ணித்துள்ளார்.
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே ஓர் ஈ என்று டிஏபி மூத்தத் தலைவர் ஒருவர் அண்மையில் வர்ணித்து இருப்பதை துன் மகாதீர் மேற்கோள் காட்டினார்.
DAP- யைச் சேர்ந்த ங்கா கோர் மிங்கைப் பொறுத்த வரையில் அவர் ஒரு சிங்கம், அம்னோ வெறும் ஈக்கள்தான் என்பதை அம்னோ உறுப்பினர்கள் இப்போதாவது உணர வேண்டும் என்று துன் மகாதீர் கேட்டுக்கொண்டார்.