ஜன.29-
சீனப்புத்தாண்டையொட்டி தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு அமலாக்கப்பிரிவுடன் இணைந்து சாலை போக்குவரத்து இலாகா நாடு த ழுவிய நிலையில், பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு சோதனையை மேற்கொண்டுள்ளது.
420 பேருந்து ஓட்டுநர்களிடம் சிறுநீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 ஒட்டுநர்கள், போதைப்பொருள் உட்கொண்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று JPJ- வின் தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.
பேருந்து ஓட்டுநர்கள், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் இருக்கிறார்களா? என்பதை கண்டறியும் பொருட்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக Datuk Aedy குறிப்பிட்டார்.