அம்னோவை கொல்ல முயற்சிக்கிறார் துன் மகாதீர்

 ஜன.29-

மலாய்க்காரர்களின் தலையாய கட்சியான அம்னோவை ஈக்களுடன் ஒப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, அந்த வரலாற்றுமிகுந்த கட்சியை கொல்வதற்கு முயற்சி செய்கிறார் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Dr Mohd Puad Zarkashi சாடியுள்ளார்.

அம்னோவிற்கு பதிலாக டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் BERSATU கட்சியை, மலாய்க்காரர்களின் பிரதிநிதியாக கொண்டு வருவதற்காகவே அம்னோவை ஈக்களுடன் ஒப்பிட்டு, சினமூட்டும் நடவடிக்கையில் அந்த அம்னோ முன்னாள் தலைவர் ஈடுபட்டுள்ளார் என்று Puad Zarkashi குறிப்பிட்டுள்ளார்.

அம்னோவை DAP, ஈக்களுடன் ஒப்பிட்டுள்ளதாக அங்கலாய்க்கும் துன் மகாதீர், ஒரு ஈயைப் போல் அவர் அங்கும், இங்கும் பறந்து, கடைசியில் முகைதீன் யாசினிடம் ஒட்டிக்கொண்டு இருப்பதை உணரவில்லை என்று Puad Zarkashi சாடியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS