உண்மையான தகவல்களை மட்டும் பேசுமாறு முகைதீன் வலியுறுத்து

ஜன.29-

பெரிக்காத்தான் நேஷனல் உறுப்புக்கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேவையற்ற பிரச்னைகள் எழுப்புவதை தவிர்க்க அடிப்படை உண்மை விவகாரங்களை மட்டும் பேசுமாறு அக்கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் வலியுறுத்தியுள்ளார்.

உறுப்புக்கட்சித் தலைவர்கள் அல்லது உறுப்பினர்கள் வெளியிடக்கூடிய, பேசக்கூடிய ஒவ்வொரு பேச்சிலும், வாதத்திலும் அடிப்படை உண்மையிருக்க வேண்டும். தேவையற்ற சிக்கல்களை எதிர்நோக்குவதை தவிர்க்க அனுமானமான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று முகைதீன் அறிவுறுத்தினார்.

அண்மைய காலமாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் குறிப்பாக பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடிப்படையற்ற தகவல்களை பேசி, வழக்குகளில் சிக்கி வருவதைத் தொடர்ந்து டான்ஸ்ரீ முகைதீன் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.

மலேசியா பன்முகத்தன்மைக் கொண்ட ஒரு நாடாகும். பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் இந்த பன்முகத்தன்மையில் எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்பதை தலைவர்கள் தங்கள் பேச்சில் வரையறை செய்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் அறிவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS