சுங்கை பட்டாணி, ஜன.30-
சுங்கை பட்டாணி, LPK 3 தொழிற்பேட்டைப்பகுதியில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று தீயில் அழிந்தது. இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு, மீட்புப்படையினர் நேற்று பிற்பகல் 1.25 மணியளவில் அவசர அழைப்பை பெற்றனர் என்று சுங்கப்பட்டாணி நிலைய செயலாக்கத் தலைவர் ஜோஹாரி பார் அஸ்வார் தெரிவித்தார்.
அமான் ஜெயா, சுங்கை பட்டாணி, யான் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள், தீயணப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தொழிற்சாலையின் கூரையில் கொழுத்து விட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் முழு வீச்சி ஈடுபட்டனர். நாலா புறமும் பரவிய தீயை முழுமையாக அணைக்கும் பணி, இரவு 10.07 மணியளவில் நிறைவுப் பெற்றதாக ஜோஹாரி தெரிவித்தார்.