பெசுட், ஜன.30-
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இவ்வாண்டு ஜனவரி மாதம் வரையில் தொடர்ந்து கொண்டு இருக்கும் வட கிழக்கு பருவமழை காலத்தில் திரெங்கானு, பெசுட் பொது தற்காப்பு படையினர் 400 க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளதாக அதன் மாவட்ட அதிகாரி முகமட் பஸ்லி மாட் யூசோப் தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் வடகிழக்கு பருவமழையில் இம்முறை அதிகமான பாம்புகள் பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பட்டார்.
நீர் சூழ்ந்த ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் அத்தகைய ஊர்வனங்கள் அடைக்காலம் நாடும் பட்சத்தில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் அவை பிடிக்கப்பட்டதாக முகமட் பஸ்லி குறிப்பிட்டார்.