கோலாலம்பூர், ஜன.30-
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில், இரு வாகனங்கள், பெரும் இரைச்சலுடன் அபாயகரமாக செலுத்தப்பட்டு, இருவர் மோதித்தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் நால்வரை கைது செய்துள்ளனர்.
அந்த நான்கு நபர்களும் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் அஸ்ரி அக்மார் அயூப் தெரிவித்தார்.
அந்த நால்வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியை பெறவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அந்த கேளிக்கை மையத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பின்னர் கேளிக்கை மையத்தின் வெளி வளாகத்திலும் தொடர்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் வாகனங்களினால் மோதப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.