ஜோகூர் பாரு, ஜன. 30-
ஜோகூர்பாரு, கம்போங் பெண்டாஹாரா, ஜாலான் ஷாபானில் உள்ள ஒரு பட்டறை தீப்பிடித்துக் கொண்டதில் 24 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன. இச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை 3.56 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தெப்ராவ் தீயணைப்பு நிலையத்தின் செயலாக்கத் தலைவர் முகமட் ஷாஹீர் இக்வான் தெரிவித்தார்.
இத்தீவிபத்தில் அந்த பட்டறை 80 விழுக்காடு அழிந்தது. தீயில் அழிந்த 24 மோட்டார் சைக்கிள்கள், அந்த பட்டறையில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களாகும் என்று பூர்வாங்க புலன் விசாரணையில் தெரியவந்துள்தாக அவர் குறிப்பிட்டார்.
இதில் உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.