கோலாலம்பூர், ஜன.30-
தாய்லாந்தில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை கொன்று விட்டு, நாட்டின் எல்லையைக் கடந்து, மலேசியாவில்
பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் இருவரை அரச மலேசிய போலீஸ் படை தேடி வருவதாக அதன் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் தேடப்பட்டதில் அந்த சந்தேகப் பேர்வழிகள் குறித்து எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்து உயர் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட பின்னர் அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் மலேசியாவிற்கு ஓடி
வந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ஐஜிபி தெரிவித்தார்.
தாய்லாந்துப் பிரஜைகளான 30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகள், தாய்லாந்து, Chanae மற்றும் Rueso பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.