தேசிய முக்குளிப்பு அணியை விட்டுச் செல்கிறார் பிரையன்

கோலாலம்பூர், ஜன.30-

தேசிய முக்குளிப்பு அணியின் முன்னாள்  தொழில்நுட்ப இயக்குனர் பிரையன் நிக்சன் லோமாஸ், உள்நாட்டு முக்குளிப்பு நிபுணத்துவம் அனைத்துலக அளவில் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருவதற்கு ஒரு சான்றாக விளங்குகிறார். அவரை ஆசிய நாடுகளில் ஈண்டு கவர்ந்திழுத்துள்ளது. சிங்கப்பூரின் தேசிய முக்குளிப்பு அணியின் திறன் மேம்பாட்டு பயிற்சியாளராக முன்னாள் தேசிய பெண்கள் மூக்குளிப்பு வீராங்கனை வெண்டி என்ஜி நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு முக்குளிப்பு அணியின் தொழில்நுட்ப இயக்குநர் பதவியில் இருந்து பிரையன் ராஜினாமா செய்துள்ளார். 

 
பிரையன் தனது ராஜினாமா கடிதத்தை டிசம்பர் 23 அன்று சமர்ப்பித்தார். அவர் பயிற்சித் துறையில் தனது சிறகை விரிக்க ஜனவரி 22 ஆம் தேதியுடன தேசிய அணியுடன் அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை முடித்துக் கொண்டார். 
“நான் தேசிய டைவிங் அணியில் இருந்து விலகியிருப்பது உண்மைதான். கடந்த டிசம்பரில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த நாட்டை நான் முன்கூட்டியே வெளிப்படுத்த முடியாது. ஏதேனும் முன்னேற்றங்கள் இருந்தால் நான் உங்களுக்கு பின்னர் தெரிவிக்கிறேன்,” என்று அவர் இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார். 

 
34 வயதான பிரையன், 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற உலகின் இரண்டாவது இளைய தடகள வீரராக விளங்கினார். அதே ஆண்டில் உலக ஜூனியர் சாம்பியனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 இல் ஓய்வு பெற்ற பிறகு, பிரையன் சிலாங்கூர் முக்குளிப்பு அணியின் பகுதி நேர பயிற்சியாளராக இருந்தார், பின்னர் 2023 அக்டோபரில் தேசிய முக்குளிப்பு அணியின் தொழில்நுட்ப இயக்குநராக நியமிக்கப்படும் முன் குவைத்தில் உள்ள கஸ்மா முக்குளிப்பு கிளப்பின் பயிற்றுநராக மத்திய கிழக்கிற்குச் சென்றார். 

WATCH OUR LATEST NEWS