சுங்கை பட்டாணி, ஜன.30-
சுங்கை பட்டாணி, தாமான் கோல மூடாவில் நேற்று காலை 9.20 மணியளவில் வீடு ஒன்றில் சலவை இயந்திரத்தைத் திருட முயற்சி செய்த ஆடவர் ஒருவர் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 36 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், ஒரு வீட்டின் முன் நின்று, முன்வாசல் இரும்புக்கேட்டை நகத்தியப் பின்னர் அந்த சலவை இயந்திரத்தை மோட்டார் சைக்கிள் அருகில் இழுத்து வந்துள்ளார்.
தனது மோட்டார் சைக்கிளில் அந்த இயந்திரத்தை ஏற்றுவதற்கு முயற்சி செய்த போது, பொது மக்கள் பார்த்து விட்டதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பிக்க முற்பட்டார்.
எனினும் அந்த நபர், பொது மக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டு ரோந்துப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அசாருடின் வான் அரிபின் தெரிவித்தார்.