ஜித்ரா, ஜன.30-
மடிக்கணினி விற்பனைக் கடையில் போலி ரசீதைப் பயன்படுத்தி, 1,499 ரிங்கிட் மதிப்புள்ள மடிக்கணியை வாங்கிய பெண் ஒருவர் தற்போது தேடப்பட்டு வருகிறார்.
கெடா ஜித்ராவில் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் மடிக்கணினி வாங்கியதற்கு தனது கைப்பேசியில் பணமாற்றப்பட்டதற்கு ஒரு போலி ரசீதைக் காட்டி, 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், மடிக்கணியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அந்த ரசீது உண்மையானதுதானா? என்று பரிசோதிப்பதற்குள், கணினியைப் பெற்றுக் கொண்ட அடுத்த கணமே அந்த பெண் கடையை விட்டு வெளியேறி மாயமானார் என்று கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.