கூச்சிங், ஜன.30-
சரவாவில் பிரதான எண்ணெய் தோண்டும் பகுதிகளான மீரி மற்றும் பிந்துலு ஆகியவை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போதிலும் இவ்விரு பகுதிகளிலும் தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸின் செயலாக்கத்தைப் பாதிக்கச் செய்யவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் பெட்ரோனாஸின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பது தங்களின் தலையாயப் பணியாக இருக்கும் என்று அந்த தேசிய பெட்ரோலிய நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.