கோலாலம்பூர், ஜன.30-
நகைச்சுவைக் கலைஞர் ஒருவரின் மனைவி செய்து கொண்ட புகாரைத் தொடர்ந்து 95 ஆயிரத்து 180 ரிங்கிட் ஏமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரு தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
20 வயது மதிக்கத்தக்க கணவரும், மனைவியும் நேற்று இரவு சிப்பாங், சாலாக் திங்கியில் உள்ள அவர்களின் இல்லத்தில் கைது செய்யப்பட்டதாக டத்தோ ஹுசேன் ஒமார் குறிப்பிட்டுள்ளார்.
அத்தம்பதியர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை விசாரணை செய்வதற்கு ஏதுவாக காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுப்புக்காவல் அனுமதி, பெறப்பட்டுள்ளதாக டத்தோ ஹுசேன் ஒமார் தெரிவித்தார்.