ஜோர்ஜ்டவுன், ஜன.30-
படுக்கையறை கட்டிலின் காலில் தவறுதலாக இடித்துக்கொண்ட டிஏபி தலைவர் லிம் குவான் , கால் விரலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து லிம் குவான் பினாங்கு ஐலன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மருத்துவமனைக்கு செல்லும்படி தமது குடும்பத்தினர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து தமக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அடிப்பட்ட காலிலேயே மீண்டும் அடிப்பட்டுள்ளது. தமக்கு உடனடி சிகிச்சை அளித்த ஐலன் மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவ நிபுணர் டத்தோ ஓ கிம் சூனுக்கு லிம் குவான் எங் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சீனப்புத்தாண்டு விடுமுறையையும் பொருட்படுத்தாமல் அவர் தமக்காக அதிக சிரத்தை எடுத்துக் கொண்டதாக லிம் குவான் எங் தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.