ஷா ஆலாம், ஜன.30-
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஆலோசனை வாரிய உறுப்பினர் ஒருவருக்கு 40 லட்சம் ரிங்கிட் குத்தகை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மாநகர் மன்றத்திடமிருந்து நாளை வெள்ளிக்கிழமை உரிய விளக்கம் பெறப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக SPRM-மின் செயலாக்கத்தற்கான துணை தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ அகமட் கூசைரி தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் நன்னெறி பிரிவிடம் விளக்கம் கோரப்படும். இந்த குத்தகைத் திட்டத்தில் லஞ்ச ஊழலுக்கான அம்சங்கள் இடம் பெற்று இருக்குமேயானால் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.