கோலாலம்பூர், ஜன.30-
சபா, சரவாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு கூட்டரசு மற்றும் மாநில அரசு ஏஜென்சிகளின் முழு கேந்திரத்தையும் ஒருங்கிணைக்குமாறு தேசிய பேரிடர் நிர்வாக ஏஜென்சியான நட்மாவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராாஹிம் உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் நலனையும் உறுதி செய்ய வேண்டும் என்று நட்மாவை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
சபா, சரவாவில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருவதாக கிடைக்கப் பெற்ற தகவல் தம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இந்த வெள்ளத்தில் SPM தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய மாநில கல்வி இலாகா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.