கோலாலம்பூர், பிப்.3-
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமநிதி பங்களிப்பு இரண்டு விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது திரள்வானது அல்ல என்றும் பிரதமர் டதோஶ்ரீ அன்வார் இம்ராஹிம் தெரிவித்தார். இரண்டு விழுக்காடு முதல் தொடங்கி நான்கு விழுக்காடாகவும் பின்னர் ஆறு விழுக்காடாகவும் படிப்படியாக உயரும் என்று சிலர் கவலை தெரிவித்த நிலையில், அவ்வாறு நடக்காது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.
தற்போது இரண்டு விழுக்காடில் வைத்திருப்பதாகவும், நிலைமை மேம்படும் வரை காத்திருப்பதாகவும் அவர் கூறினார். மலேசிய சீன வர்த்தகம், தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றுகையில், இந்த விவரத்தைத் தெரிவித்தார்.
தொடக்கத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கஊழியர் சேமநிதி பங்களிப்பு 12 விழுக்காடாக நிர்ணயிக்க முன்மொழியப்பட்டது. ஆனால் அமைச்சரவை பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது இரண்டு விழுக்காடாக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் நிலைமை மேம்படும்போது இது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் முதலாளிகளையும் பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான விவகாரமாகக் கருதப்படுகிறது.