குவாந்தான், பிப்.3-
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், காரின் பின்புறம் மோதி, உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் கிழக்குக்கரையோர நெடுஞ்சாலையான LPT 1 இல் 198.8 ஆவது கிலோமீட்டரில் குவாந்தான் அருகில் நிகழ்ந்தது.
இதில் 37 வயது முகமட் ஹபிசுல் கமருல்சமான் என்பவர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார். 29 வயது மாது செலுத்திய Perodua Bezza காரில், அந்த ஆடவர், மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் சஹாரி வான் புசு தெரிவித்தார்.