கோலாலம்பூர், பிப். 3-
கடந்த ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மூடா கட்சியின் முன்னாள் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் வருகை , 100 க்கு 100 விழுக்காடு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று 15 ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் தொடங்கிய போது, இவ்விவகாரத்தை சைட் சாடிக், தமது முகநூலில் பகிர்ந்து கொண்டார்.
சைட் சாடிக், நாடாளுமன்ற சிறப்பு நடவடிக்கைக் குழு அளவிலான கூட்டத்திலும் இதேபோன்று தமது வருகையை 100 விழுக்காடு பதிவு செய்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மூவார் எம்.பி.யாக தாம் தேர்வு செய்யப்பட்டது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஆஜராகத் தவறியது இல்லை என்பதையும் சைட் சாடிக் சுட்டிக் காட்டியுள்ளார்.