குற்றச்சாட்டை மறுத்தது போலீஸ் துறை

கோல சிலாங்கூர், பிப்.3-

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போன்று புஞ்சாக் அலாம், அலாம் ஜெயா வர்த்தக மையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விபச்சார நடவடிக்கை நடைபெற்று வருவதாக கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.20 மணியளவில் அந்த ஹோட்டலில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அப்படி எந்தவோர் ஒழுங்கீன நடவடிக்கையும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அசாஹாருடின் தாஜூடின் தெரிவித்துள்ளார்.

அந்த ஹோட்டலில் விபச்சார நடவடிக்கை நடைபெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த காணொளி தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS