அலோர் காஜா, பிப்.3-
19 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவரை மானபங்கம் செய்ததாக கூறப்படும் மலாக்கா, அலோர் காஜா, பல் கிளினிக் ஒன்றின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மதியம் அந்த கிளினிக்கில் பல் மருத்துவ சிகிச்சையைச் செய்து கொண்ட அந்த மாணவர், கழிப்பறைக்குச் செல்ல பாதுகாவலரிடம் வழி கேட்ட போது, இந்த மானபங்கம் சம்பவம் நிகழ்ந்ததாக அந்த மாணவர் போலீசில் புகார் செய்துள்ளார் என்று மலாக்கா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் நஸ்ரி சவாவி தெரிவித்தார்.
வழிகாட்டுவதாகக் கூறி, அந்த மாணவனின் பின்னாலேயே சென்ற 19 வயதுடைய அந்த பாதுகாவலர், கழிப்பறையில் மின்விளக்கைத் தட்டுவதாக கூறி, அந்த மாணவரை மானப்பங்கம் செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டத்தோ முகமட் நஸ்ரி குறிப்பிட்டார்.