கோலாலம்பூர், பிப்.3-
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மின்சாரக் கட்டணங்கள் கண்டிப்பாக உயர்த்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை அரசாங்கத்திற்கு கடினமாகவோ, பாதகமாகவோ இருக்கும் என்பதைத் தாம் ஒப்புக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் இவ்விவகாரம் தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை செவிமடுக்கவும் அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனால் அரசாங்கம் மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
எனினும் மின்சாரக் கட்டணம் 14 விழுக்காடு வரை உயர்த்தப்படும் என்று கூறப்படுவதை டத்தோஸ்ரீ அன்வார் மறுத்தார்.