அலோர் காஜா, பிப்.4-
மலாக்கா, அலோர் காஜாவில் பல் கிளினிக்கில் சிகிச்சைக்கு வந்த 19 வயது பல்லைக்கழக மாணவரை மானபங்கம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள அந்த கிளினிக்கின் 19 வயது பாதுகாவலரை நான்கு நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அந்த பாதுகாவலர், மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷு முன்னிலையில் நிறுத்தப்பட்டு இன்று முதல் தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அந்த கிளினிக்கின் கழிப்பறையில் அந்த பாதுகாவலர் இக்குற்றத்தைப் புரிந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.