செம்பனைத் தோட்டத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு

போர்ட்டிக்சன், பிப்.4-

போர்ட்டிக்சன், லுக்குட், சிலியாவ் செம்பனைத் தோட்டத்தில் மனித எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டன.

சிலியாவ் தோட்டத்தில் செம்பனை மரங்கள் மத்தியில் கடந்து செல்லும் நீர் குழாய்களைச் சீர்படுத்தும் பணியில் நேற்று காலை 10.10 மணியளவில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவர்கள், அந்த மனித எலும்புகளைக் கண்டனர்.

பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது என்று போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் முகமட் முஸ்தப்பா ஹுசேன் தெரிவித்தார்.

அவ்விடத்தில் தடயவியல் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஒரு மண்டை ஓடும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு குற்றச்செயல் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இது திடீர் மரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாக முகமட் முஸ்தப்பா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS