Rohingya ஆடவர் அடித்துக் கொலைச் செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்

குவாலா மூடா, பிப்.4-

40 ஆயிரம் ரிங்கட் ரொக்கம் மற்றும் தங்க நகைகளைத் திருடிவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, Rohingya ஆடவர் அடித்து கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.

20 வயது மதிக்கத்தக்க அந்த Rohingya ஆடவர், கெடா, குவாலா மூடா வட்டாரத்தில் ஒரு வீட்டில் கடந்த 4 மாத காலமாக வீட்டுப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது கணவர் அண்மையில் ஜாலான் கம்போங் சுங்கை பாருவில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்ததாக அந்த நபரின் மனைவி கடந்த ஜனவரி 28 ஆம் தேதி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தெரியவந்துள்ளது என்று குவாலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அசாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

தான் வேலை செய்து வந்த வீட்டில் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி தேதி 40 ஆயிரத்து 150 ரிங்கிட் ரொக்கத்தையும், தங்க சங்கிலி மற்றும் மூக்குத்தியைத் திருடிவிட்டதாக கூறி அந்த Rohingya ஆடவர், கைகால்கள் கட்டுப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

அகதி அந்தஸ்தில் உள்ள அந்த ஆடவர் இறந்து விட்டார் என்பது தெரியவந்தவுடன் , வீட்டின் உரிமையாளர், அந்த ஆடவரின் உடலை வீட்டு அருகில் ஒரு பிளாஸ்டிக் தொட்டிக்குள் வைத்து, புதைத்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரான 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த Rohingya ஆடவரை அடித்து சித்ரவதை செய்ததில் வீட்டு உரிமையாளருக்கு சில Rohingya ஆடவர்கள் உடந்தையாக இருந்துள்ளதாக நம்பப்படுகிறது.

வீட்டு உரிமையாளர், அந்த Rohingya ஆடவரை கட்டிப்போட்டு அடிக்கும் காட்சியைக்கொண்ட இரு காணொளிகள் கைப்பற்றப்ட்டுள்ளதாக Wan Azharuddin மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS