மலாக்கா முதலமைச்சர் இலாகாவின் முன்னாள் உதவி தலைமைச் செயலாளர் கைது

மலாக்கா, பிப்.4-

மலாக்கா மாநில முதலமைச்சர் இலாகாவின் முன்னாள் உதவி தலைமைச் செயலாளரான 42 வயது மாது கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாது கடந்த ஆண்டு உயர் பதவி வகித்து வந்த போது, தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி, லஞ்ச ஊழல் புரிந்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் இன்று மலாக்கா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஷர்டா ஷியேன்ஹா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த பெண் உயர் அதிகாரியை விசாரணைக்கு ஏதுவாக இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் சனிக்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது.

நடக்காத நிகழ்ச்சிகளுக்கு நடந்ததைப் போல் போலி பணக் கோரல்களில் அந்த மாது ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS