தைப்பூசத்திற்கு கெடாவில் சிறப்பு விடுமுறை

அலோர் ஸ்டார், பிப்.4-

வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தைப்பூச விழா கொண்டாடப்படுவதையொட்டி கெடா மாநிலத்தில் சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று மாநில அரசாங்க துணை செயலாளர் டத்தோ டாக்டர் நட்ஸ்மான் முஸ்தப்பா அறிவித்துள்ளார்.

1951 ஆம் ஆண்டு தொழில் சட்டம் 9 ஆவது பிரிவின் கீழ் தைப்பூசத்திற்கு கெடா மாநிலத்தில் இந்த சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான சுற்றறிக்கை கெடா மாநில அரசு இலாகாக்களுக்கும், கூட்டரசு அரசாங்கத்திற்கும் அனுப்பப்பட்டு விட்டதாக டாக்டர் நட்ஸ்மான் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தைப்பூச விழாவை கெடா மாநிலத்தில் உள்ள இந்துக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக தைப்பூச விடுமுறையை மாநில ஆட்சிக்குழு அங்கீகரிக்கப்பட்ட விவகாரத்தை கடந்த ஜனவரி 22 ஆம் தேதி கெடா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS