பெட்டாலிங் ஜெயா, பிப்.4-
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி சீனப் புத்தாண்டு தினத்தன்று பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா, பெலாங்கி உத்தாமா கொண்டோமினியம் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் தனது வீட்டிலிருந்து நீல நிற புரோட்டோன் இஸ்வாரா காரில் புறப்பட்ட சென்ற 34 வயது பெண், பிணமாகக் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
Yong Jia Yein என்ற அடையாளம் கூறப்பட்ட அந்தப் பெண்ணை அவரின் குடும்பத்தினர் கடந்த ஆறு நாட்களாகத் தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடல், ஜாலான் கோலசிலாங்கூர், ஜெராம் அருகில் பந்தாய் ரெமிஸ் கடற்கரை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீசார் அறிக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.