பெட்டாலிங் ஜெயா, பிப்.4-
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெட்டாலிங் ஜெயா, டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் பாதுகாவலரால் கண்டு பிடிக்கப்பட்ட 5 லட்சம் ரிங்கிட் ரொக்கத் தொகையைக் கொண்ட பணப்பெட்டி, அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
அந்த ரொக்கப்பணம் குறித்து தாங்கள் மேற்கொண்ட விசாரணையில், நிறுவனம் ஒன்றின் உரிமையாளருக்கு அந்த பணம் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளதாக டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்ற உத்தரவின் வாயிலாக அந்தப் பணத்தை அதன் உரிமையாளரிடமே ஒப்படைக்கும்படி துணை பிராசிகியூட்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி விளக்கினார்.