பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு மாகோத்தா பஹாங், தெங்கு ஹஸ்சானால் இப்ராஹிம் அலாம் ஷாவை திருமணம் செய்யப் போவதாக கடந்த ஆண்டு சமூக வளைத்தளங்களில் தகவலை பரப்பிய பரிடா டாவுட் என்ற பெண்ணிடம் போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
அந்தப் பெண், கடந்த மாதம் பேரா, மஞ்சோங்கில் கில் வெற்றிகரமாக அடையாளம் காணப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ யஹாயா ஒஸ்மான்ன் தெரிவித்தார்.
விசாரணை அறிக்கை, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு முன்னதாக அந்த அறிக்கை தற்போது முறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
வரும் ஏப்ரல் மாதம் எந்தவொரு பெண்ணுடனும் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாட்டை தெங்கு மாகோத்தா பஹாங் கொண்டிருப்பதாக கூறப்படுவதை பகாங் அரண்மனை வன்மையாக மறுத்துள்ளது.
பரிடா டாவுட் என்ற பெண், இன்ஸ்தாகிராமில் பகிர்ந்த அந்த தகவலினால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து புலன்விசாரணை செய்யும்படி போலீஸ் துறையை பகாங் அரண்மனை கேட்டுக்கொண்டது.