ஊடகங்களுக்குச் சென்றால், தகவல் அளிப்பவர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட மாட்டார்கள்

கோலாலம்பூர், பிப்.4-

தகவல் அளிப்பவர்கள், தாங்கள் கொண்டுள்ள தகவலை போலீஸ் போன்ற அமலாக்கத் தரப்பினரிடம் தெரிவிக்காமல், நேரடியாக ஊடகங்களுக்கு வழங்குவார்களேயானால் 2010 ஆம் ஆண்டு தகவல் அளிப்பவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாது என்று சட்டத்துறை அமைச்சர் அஸாலினா ஓத்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளையில் முதலில் ஊடகங்களுக்கு தகவலைத் தந்து விடும் நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு 2010 ஆம் ஆண்டு தகவல் அளிப்பவர்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்பதையும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேரடியாக தகவல் அளிப்பவர்களின் நோக்கங்கள் சில வேளைகளில் தீய எண்ணத்தை கொண்டு இருப்பதையும் அஸாலினா விளக்கினார்.

நடப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் தாம் கொண்டுள்ள தகவலை முதலில் அமலாாக்கத் தரப்பினரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS