மசீச-வை வெளியேற்றும் திட்டம் ஏதுமில்லை

பெட்டாலிங் ஜெயா, பிப்.4-

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே கூட்டணியில் ஓர் உறுப்புக்கட்சியாக இருந்து வரும் மலேசிய சீன சமூகத்தின் பிரதான அரசியல் கட்சியான மசீச.வை பாரிசான் நேஷனல் கூட்டணியிலிருந்து வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்த கூட்டணியின் தலைவர் டத்தோஶ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

பாரிசான் நேஷனலில் ஓர் அங்கமாகவும் சக தோழமைக் கட்சியாகவும் மசீச.வை நிலைநிறுத்தப்படும் பாரம்பரியத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தமது தலைமையிலான கூட்டணி உறுதியாக இருந்து வருவதாக துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

பாரிசான் நேஷனலிருந்து எந்தவொரு உறுப்புக்கட்சியையும் வெளியேற்றுமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளினால் அதன் தலைவர்கள் மதிமயங்கி விட மாட்டார்கள் என்பதையும் அம்னோ தலைவருமான ஜாஹிட் விளக்கினார்.

அம்னோவுடன் ஒத்திசைவாக மசீச செயல்பட்டதன் காரணமாக அக்கட்சி, சீன சமூகத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக இதற்கு முன்பு குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் பாரிசான் நேஷனலிருந்து மசீச.வை வெளியேற்றுவதற்கு வெளிசக்திகள் முயற்சி செய்து வருவதாக அண்மையில் சீனப்பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த மசீச. தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்து இருந்தார்.

WATCH OUR LATEST NEWS