சிரம்பான், பிப்.4-
கணவரை திறன் கைப்பேசினால் அடித்து காயப்படுத்தியதாக குடும்ப மாது ஒருவர், சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
39 வயது மாஸ் சூரி அப்துல் ரஹ்மான் அந்த மாது, நீதிபதி டத்தின் சுரிதா புடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி முதல் தேதி மதியம் 1.30 மணியளவில் நீலாய், Bukit Citra Residensi-யில் உள்ள வீட்டில் 39 வயதுடைய தனது கணவரை கைப்பேசியினால் அடித்து காயப்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அந்த மாது குற்றச்சாட்மை மறுத்து விசாரணை கோரியதால் அவரை 7 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.