11 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக மந்திரவாதி ஒருவர் கைது

கெமாமான், பிப்.4-

திரெங்கானு, கெமாமான் மாவட்டத்தில் 11 வயது சிறுமியின் பிணியைப் போக்குவதாக கூறி, அந்த சிறுமியை மானபங்கம் செய்ததாக கூறப்படும் போமோ ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

20 வயதுடைய அந்த போமோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று மாந்திரீக சடங்கு செய்வதாக கூறி, அந்த சிறுமியிடம் ஆபாச சேட்டைப் புரிந்துள்ளதாக திரெங்கானு மாநில போலீஸ் தலைவர் கைரி கைருடின் தெரிவித்தார்.

பாலியல் பலாத்காரம், மானபங்கம் உட்பட பல்வேறு குற்றப்பதிவுகளை அந்த ஆடவர் கொண்டு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கைரி கைருடின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS