கோலாலம்பூர், பிப்.4-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் சம்பந்தப்பட்ட கூடுதல் அரசாணை உத்தரவு குறித்து யாரும் வாய் திறக்கக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவை சபா நாயர் டான்ஶ்ரீ ஜோஹாரி அப்துல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசாணை உத்தரவு தொடர்பில் பிரதமர் மெளனம் சாதித்து வருகிறார். இந்த கூடுதல் உத்தரவை மறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையானது, மாமன்னருக்கு எதிரான தேசத் துரோகச் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், லாருட் எம்.பி.யான டத்தோஸ்ரீ ஹம்ஸா குற்றஞ்சாட்டியைத் தொடர்ந்து அவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் கடும் விவாதம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து அரசாணை உத்தரவு தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் கேள்வி எழுப்பவோ, விவாதம் செய்யவோ தடை விதிக்கப்படுவதாக தமது அதிகாரத்தை மேற்கோள்காட்டி சபாநாயகர் ஜோஹாரி அப்துல் உத்தரவு பிறப்பித்தார்.