கோலாலம்பூர், பிப்.4-
பயனீட்டாளர்களின் அரிசி விலை தொடர்பான தாக்கத்தை ஈடுசெய்ய கூடுதல் மானியங்களுடன் நெல் கொள்முதல் அடிப்படை விலையை அரசாங்கம் அடுத்த வாரம் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை விலை உயர்வு தொடர்பான விளக்கம் மற்றும் விவரங்களை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு ஓர் அறிக்கை வாயிலாக சமர்ப்பிப்பார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.