பங்கோர் தீவில் நீர் சேமிப்பு தொட்டியில் ஆடவர் சடலம்

பங்கோர், பிப்.5

பங்கோர் தீவில் சுங்கை பினாங் பெசாரில் உள்ள துரப்பணமேடையில் நீர் சேமிப்பு தொட்டியில் ஆடவர் ஒருவரின் சடலம் மிதப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து பங்கோர் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

நீர் தொட்டிலிருந்து மீட்கப்பட்ட அந்த ஆவரின் உடல், சவப்பரிசோனைக்காக ஶ்ரீ மஞ்சோங் மாவட்ட மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படடுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆடவரின் மரணம் தொடர்பில் தகவல் கொண்டுள்ளவர்கள், போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு ஏசிபி ஹஸ்புல்லா கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS