செர்டாங் மருத்துவமனையில் நிகழ்ந்த விபத்து, குற்றத்தன்மை இல்லை

செப்பாங், பிப்.5-

செர்டாங் மருத்துவமனையின் கார் நிறுத்தும் அடுக்குமாடி கட்டடப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கார் ஒன்று, அதன் சுவரை உடைத்துக்கொண்டு அந்தரங்கத்தில் தொங்கிய சம்பவத்தில் குற்றத்தன்மை அல்லது கீழறுப்பு செயலக்கான எந்த அம்சங்களும் இல்லை என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிசாம் பஹாமான் தெரிவித்தார்.

சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனை என்று அழைக்கப்படும் செர்டாங் மருத்துவமனையில் மதியம் 1.15 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம், அதன் ஓட்டநரின் கவனக்குறைவே தவிர குற்றத்தன்மை அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

தவறுதலாக எண்ணெய் பெடலை அழுத்தி விட்டதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 39 வயது வாகனமோட்டுநர், எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS