முஸ்லிம்களுக்கான புதிய விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன

கோலாலம்பூர், பிப்.5-

முஸ்லிம் அல்லாதவர்களின் நிகழ்வுகள், இறுதிச் சடங்குகள் அல்லது வழிபாட்டுத் தலங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் முஸ்லிம்களுக்கு வழிகாட்டும் புதிய விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இது போன்ற நிகழ்வுகளுக்கு தலைவர்கள் அல்லது முஸ்லிம்களை அழைக்கப்படும் போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இஸ்லாமிய அதிகாரிகளின் கருத்துகளையும், ஒப்புதலையும் பெற வேண்டும் என அந்த பரிந்துரையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க, தற்போது நடைமுறையில் இருந்து வரும் வழிகாட்டல் முறையில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் .

இந்த விதிமுறைகளை தீர்க்கமாக தீர்மானிப்பதற்கு அவற்றை இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றம் ஆராய்ந்து வருவதாக சமய விவகாரங்களுக்கான பிரதமர்துறை அமைச்சர் செனட்டர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS