கோலாலம்பூர், பிப்.5-
மனித வள அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் மனித வள மேம்பாட்டு நிதி நிறுவனமான HRD Corp. சம்பந்தப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
HRD Corp. பில், விதிமுறைகள் மீறல் தொடர்பில் நிர்வாகத்தின் அம்சங்களையும், ஊழல் சம்பந்தப்பட்ட அனைத்து சாத்தியமான கூறுகளையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது என்று சட்டத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அசாலீனா ஒத்மான் சைட் தெரிவித்தார்.
ஊழல் தொடர்பில் 694 ஆவது சட்டத்திற்கு ஏற்ப அதிகாரம் துஷ்பிரயோகம் நடந்துள்ளதா? என்பது குறித்து SPRM ஆராய்ந்து வருகிறது என்று பாயான் பாரு எம்.பி. Sim Tze Tzin எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அசாலீனா ஒத்மான் எழுத்துப்பூர்வமான பதிலை தந்துள்ளார்.