பினாங்கு அரசு சார்பு நிறுவனத்தின் இயக்குநர் உட்பட இருவர் கைது

ஜார்ஜ்டவுன், பிப்.5-

பினாங்கு, அரசு சார்பு நிறுவனம் ஒன்றின் இயக்குநர் மற்றும் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஆகிய இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

பினாங்கு தஞ்சோங் தோகோங்கில் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த தங்கிச் செல்லும் வீட்டு வசதி மற்றும் அங்கு வழங்கப்பட்ட BBQ உணவு உபசரிப்பு என, 2 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள உபசரணையை ஏற்றுக்கொண்டது மூலம் கையூட்டுக்கு துணைப் போனதாக 37 மற்றும் 42 வயதுடைய இரண்டு இயக்குநர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

SPRM-மின் தடுப்புக்காவல் உடை அணிவிக்கப்பட்டு, கைவிலங்கிடப்பட்ட நிலையில் அந்த இரண்டு இயக்குநர்களும் இன்று காலையில் ஜார்ஜ்டவுன், நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முகமட் அஸ்லான் பஸ்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.

அந்த நிறுவனம் வழங்கிய உபசரணையை ஏற்றுக்கொண்டது மூலம் அரசு சார்பு நிறுவனத்தின் குத்தகைகளை அந்த நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இருவரும் கடமைப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

விசாரணைக்கு ஏதுவாக அவ்விருவரையும் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

WATCH OUR LATEST NEWS