Zakir Naik நாட்டில் உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்படுகிறரா? போலீஸ் துறை விளக்கம் அளிக்க வேண்டும்

கோலாலம்பூர், பிப்.5-

மலேசியாவில் உரை நிகழ்த்துவதற்கும், சொற்பொழிவு ஆற்றுவதற்கும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் Dr Zakir Naik- க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும் அந்த சமயப் போதகர் பொதுவில் சொற்பொழிவு ஆற்றியதாக வெளிவந்துள்ள தகவல் குறித்து அரச மலேசிய போலீஸ் படை விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் வலியுறுத்தியுள்ளார்.

அகப்பக்க செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவல்படி Zakir Naik, பெர்லிஸ் மாநிலத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உரை நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளது.

அந்த சமயப் போதகருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்னமும் அமலில் உள்ளதா, இல்லையா? என்பது குறித்து போலீஸ் படை குறிப்பாக ஐஜிபி. யிடம் தாம் கேட்க விரும்புவதாக ராயர் குறிப்பிட்டார்.

Zakir Naik க்கு விதிக்கப்பட்ட தடை இன்னமும் அமலில் இருக்கிறது என்றால் பெர்லிஸ் மாநிலத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உரையாற்றுவதற்கு அவர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்று நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ராயர் வினவினார்.

தனக்கு விதிக்கப்பட்ட தடையையும் மீறியிருப்பாரேயானால் அவருக்கு எதிராக போலீஸ் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராயர் வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS