ஜோகூர் பாரு, பிப்.5-
கடந்த ஆண்டில் ஜோகூர் மாநில போதைப்பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவு, 25 போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை முறியடித்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் குமார் முத்துவேல் தெரிவித்தார்.
முறியடிக்கப்பட்ட கும்பல்களில் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருந்த கும்பல்களும் அடங்கும்.
இதன் மூலம் கடந்த ஆண்டில் 99.76 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பலதரப்பட்ட வகையைச் சேர்ந்த 7.30 டன் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர்பாருவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனை தெரிவித்தார்.