கோத்தா பாரு, பிப்.5-
தாய்லாந்து Narathiwatடில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து தாய்லாந்திற்குச் செல்லத் திட்டமிடும் மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்கும் அதேவேளையில் அந்நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுற்றுப் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு சம்பவங்களையும் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது யூசோப் மாமாட் வலியுறுத்தினார்.