கோலாலம்பூர், பிப்.5-
மலேசியாவில் தங்கியுள்ள சர்ச்சைக்குரிய சமயப் போதகர் Zakir Naik, பொது நிகழ்வில் உரையாற்றவோ அல்லது சொற்பொழிவாற்றவோ விதிக்கப்பட்டுள்ள தடையின் நிலை குறித்து உள்துறை அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கிள்ளான் எம்.பி. வீ. கணபதிராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த மாதம் அந்த சர்ச்சைக்குரிய சமயப் போதகர், பெர்லிஸ் மாநிலத்தில் ஓர் இடத்தில் சொற்பொழிவாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படியென்றால் Zakir Naik-கிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடை உத்தரவு அகற்றப்பட்டு விட்டதா? என்பது குறித்து உள்துறை அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுன்றத்தில் கணபதி ராவ் கேட்டுக்கொண்டார்.