புத்ராஜெயா, பிப்.5-
2025 ஆம் ஆண்டுக்கான மாமன்னர் உபகாரச் சம்பளத்திற்கு மாணவர்கள் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் இம்மாதம் 28 ஆம் வரையில் ஓன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
நாட்டிற்கு மிகப் பெரிய மேம்பாட்டை கொண்டு வரக்கூடிய துறைகளுக்கு படிக்கும் மலேசிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக பல்வேறு துறைகளில் உள்நாட்டு உயர்க்கல்விக்கூடங்கள் அல்லது உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை அல்லது PhD முனைவர் பட்டத்திற்கு உயர்க்கல்வி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பிரசித்தி பெற்ற இந்த உபகாரச் சம்பளம் விண்ணப்பம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக பொதுச் சேவை இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.