கங்கார், பிப்.6-
பெர்லிஸ் மாநில முப்தி ஏற்பாடு செய்த சாகீர் நாயிக் சொற்பொழிவு நிகழ்ச்சி தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்கும் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்களை சமய அறிஞர் டத்தோ டாக்டர் முகமட் அஸ்ரி சய்னுல் அபிடின் சாடியுள்ளார்.
தாம் அமைதியாக இருப்பதற்கு முக்கிய காரணம், பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தை மதித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கண்மூடித்தனமாகச் சாட வேண்டாம் என்று சமய அறிஞரான டாக்டர் முகமட் அஸ்ரி சய்னுல் அபிடின் கேட்டுக்கொண்டார்.