ஷா ஆலாம், பிப்.6-
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்கு சொந்தமான சமூக வலைத்தள கணக்கு மற்றும் X செயலி ஊடுருவப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துன் மகாதீரின் @chedetoofficial ( செடட்டூஅபிஸியல் ) சமூக வளைத்தள கணக்கு ஊடுருவப்பட்ட நிலையில், நேற்று புதன்கிழமை முதல் திறக்கப்பட முடியவில்லை என்று துன் மகாதீரின் அதிகாரி அடாம் முக்ரிஸ் முகமட் முஹாயாடின் தெரிவித்துள்ளார்.
துன் மகாதீரின் சமூக வளைத்தள கணக்கு ஊடுரவப்பட்டு இருப்பது குறித்து மேற்கண்ட செயலியிலிருந்து மின் அஞ்சல் வந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.